முழு வீடியோ காண:
[ Ссылка ]
நம் நாட்டின் சிறப்பே ஆன்மீகம் தான்...
அதுவும் தன்னை அறிந்து சாகாத நிலை பெற்ற சித்தர்கள் ஞானிகள் கோடிக்கணக்கான பேர்கள்...
அவர்களில் அகத்தியர் திருமூலர் ஔவையார் திருவள்ளுவர் நாயன்மார்கள் ஆழ்வார்கள் முதல் வள்ளற்பெருமான் வரை நாம் அறிவோம்...
சாகாத நிலை பெற ஞானிகள் என்ன செய்தனர்..
எனில்
"தன்னையே அர்ச்சிக்க தானிருந்தாரே" என திருமந்திரம் கூறும்..
அதாவது நம் சித்தர்கள் ஞானிகள் அனைவரும் தம் உயிரையே இறைவனாக உணர்ந்து அக வழிபாடு செய்து மேல்நிலை பெற்றனர்...
அவர்கள் தமக்குள் கண்ட அக அனுபவங்களை சிவம் சக்தி வாலை மனோன்மணி முருகன் விநாயகர் அர்த்த நாரிஸ்வரர் சங்கர நாராயணர் என தத்துவ தெய்வங்களாக அமைத்தனர்...
இந்த தத்துவ தெய்வங்களின் உண்மையை தவம் செய்து உணரலாம்...
உண்மையில் நமது தேகம் தான் இறைவன் வாசம் செய்யும் ஆலயம்...
இதைத்தான் 'ஊனுடம்பு ஆலயம்' என திருமூலர் கூறினார்...
ஞானிகள் புறத்தில் வழிபாடு செய்வதையே கண்டிக்கின்றனர்...
அதிலும் தெய்வத்தின் பெயரால் உயிர் பலி இடுவதை பெரும் பாவம் என கூறுகின்றனர்...
"உங்கள் குலதெய்வம் உங்களை உருக்குலைப்பது உண்மையே " --சிவ வாக்கியர்
"வீணே பலிகவர் தெய்வங்கள் பால் சென்று மிக்க அன்பு பூணேன்"-- அபிராமி பட்டர்
சிறு தெய்வம் ஏத்தாதே(வணங்காதே) அச்சோ--திருவாசகம்
சிறு தெய்வ வெங்கோயில் கண்ட காலத்திலும் பயந்தேன்--வள்ளலார்
நோன்பு எனப்படுவது கொன்று தின்னாமை--ஔவையார்
பிறவி கடல் கடக்க இறைவன் திருவடியை சரண் அடைய வேண்டும் என திருவள்ளுவர்..
இவ்வாறு அனைத்து ஞானிகளும் கூறி உள்ளனர்...
எனவே இந்த மனித தேகம் பெற்ற பயன் சாகாத நிலை சாயுச்சிய நிலை பெற...
நம் சித்தர்கள் ஞானிகள் நூற்களை படித்தும்
ஜீவ சமாதியில் சென்று
தியானம் செய்தும்
தானம் தர்மம் செய்தும்
தகுந்த சற்குருவை அணுகி உயிரைப் பற்றிய உபதேசம் தீட்சை பெற்றும் தன்னுள் இறைவனை காண முயல வேண்டும்...
வடலூர் வள்ளலார் அக அனுபவத்தை சத்திய ஞான சபையில் வெளிப்படையாக காட்டியுள்ளார்...
எனவே இறந்து போன ஆத்மாக்களை வழிபாடு செய்வது மிகவும் பின் தங்கிய கீழ் நிலை சிறு நெறி என சித்தர்கள் கூறுகின்றனர்...
எனவே உங்கள் உயிரான இறைவனை உணர்ந்து சாகாத நிலை ஒளி தேகம் மரணமில்லா பெருவாழ்வு பெற வாழ்த்துக்கள்...
"வருவார் அழைத்து வாடி வடலூர் வட திசைக்கே
வந்தால் பெறலாம் நல்ல வரமே"-- வள்ளலார்
"வம்மின் உலகியலீர் மரணமில்லா பெரு வாழ்வில் புகுந்திடலாம் கண்டீர் சத்தியம் " திருவருட்பிரகாச வள்ளலார்
Ещё видео!