கிருஷ்ணகிரி ஓசூர் ஏரித்தெருவை சேர்ந்தவர் வக்கீல் கண்ணன் வயது 30.
இன்று மதியம் கண்ணன் ஓசூர் கோர்ட் வளாகத்தில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த நபர் கண்ணனை அரிவாளுடன் துரத்தினார்.
கோர்ட் வாசலில் கண்ணனை மடக்கிய அந்த நபர் சரமாரியாக வெட்ட தொடங்கினார்.
கழுத்து பகுதியில் விழுந்த வெட்டால் கண்ணன் சரிந்து விழுந்தார்.
கூடியிருந்த மக்கள் முன் மீண்டும் ஒரு முறை வெட்டி விட்டு அந்த நபர் ஆயுதத்துடன் அங்கிருந்து நடந்து சென்றார்.
உயிருக்கு போராடி கொண்டிருந்த கண்ணனனை சக வக்கீல்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கண்ணனை வெட்டிய நபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இந்த சம்பவத்தை அங்கு கூடி இருந்த மக்கள் சிலர் வீடியோவாக எடுத்தனர்.
அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
முதல் கட்ட விசாரணையில் அந்த நபர் ஓசூரை சேர்ந்த ஒரு வக்கீலிடம் குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்த ஆனந்தன் வயது 38 என்பது தெரிந்தது.
ஏற்கனவே கண்ணன் மற்றும் ஆனந்தன் இருவரும் நண்பர்கள் என கூறப்படுகிறது. முன்பகை காரணமாக இந்த சம்பவம் அரங்கேறி உள்ளதும் தெரிய வந்துள்ளது.
கழுத்து, தலை, முதுகு உள்ளிட்ட 5 இடங்களில் பலத்த வெட்டு காயம் அடைந்த கண்ணன் தனியார் மருத்துவமனையில் ஐசியூவில் உள்ளார்.
சம்பவத்துக்கு பின் கோர்ட் வாசலில் திரண்ட வக்கீல்கள் தமிழக அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும், கை துப்பாக்கி கொடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
போலீசார் பேச்சு நடத்தி கலைந்து போக செய்தனர்.
கொலை நோக்கத்துடன் கோர்ட் வாசலில் நடந்த இந்த பரபரப்பு சம்பவத்தின் பின்னணி காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.
தஞ்சையில் இன்று வகுப்பறையில் ஆசிரியை படுகொலை செய்யப்பட்டார்.
ஓசூரில் பட்டப்பகலில் வக்கீல் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு உள்ளார்.
திமுக ஆட்சியில் தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலைமையை இது பிரதிபலிக்கிறது.
வன்முறை காடாக தமிழகத்தை மாற்றியதற்கு முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் என அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.#CrimeNews #Advocate #Hosur
Ещё видео!