மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
யாழ். அளவெட்டி மேற்கு மலைவேம்படியை பிறப்பிடமாகவும், ஜா எல , ஏக்-கலயை வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணராஜா புவேனஸ்வரி அவர்கள் 25-12-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சேனாதிராஜா மனோன்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,காலஞ்சென்ற நவரட்ணராஜா அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற ராஜேஸ்வரி தர்மலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும்,பவானி ,ஸ்ரீ பவன், பாமினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,தனபாலசிங்கம், கீதாஞ்சலி, திருக்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,சோமநாத், தர்ஷிகா ,கிருஷன், கியாசன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,கிருஷ்ணகுமார், நந்தகுமார், நந்தினி, ராஜ்குமார் ஆகியோரின் சிறிய தாயாரும்,ஸ்ரீ ரட்னம் , மஹேந்திரன், சன்முகேந்திரன் , மங்கையற்கரசி , மாலினி ஆகியோரின் அத்தையும் ஆவர்.அன்னாரின் பூதவுடல் 26-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.30 மணிக்கு வெஸ்டர்ன் மலர்ச்சாலை நீர்கொழும்பு வீதி, ஜா எலவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 02.00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
[ Ссылка ]
Ещё видео!