Subscribe for the latest Sermons and Worships:
[ Ссылка ]
Story behind the song Aaseervathiyum Kartharey:
இந்த பாடல் 1924-ம் ஆண்டு Rev. சாமுவேல் பாக்கியநாதன் எனும் ஐ. எம். எஸின் முதல் மிஷ்னரியால் தன்னுடைய மகன் திருமணத்திற்காக எழுதப்பட்டது. இந்த பாடல் எழுதப்பட்டதின் பின்னணியவது: தனது மகன் அஸரிய பாக்கியநாதன் மற்றும் யூனிஸ் பாக்கியநாதன் அவர்களின் திருமணம் பன்னவிலை எனும் கிராமத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதற்காக மருதகுளம் கிராமத்தை சேர்ந்த மணமகளின் உறவினர்கள் பன்னவிலைக்கு வரும் வழியில் பெருங்குளம் என்ற இடத்தில் நிறுத்தி அங்குள்ள குளத்தில் குளித்தனர். இது பிராமணர்களின் குளம் என்பதால் தீட்டு பட்டு விட்டது என்றும், அதில் அவர்கள் சிலைகளை சுத்தம் செய்ய இயலாது என்றும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். இதை அறிந்த ரெவ். சாமுவேல் பாக்கியநாதன் அவர்கள் முதலில் உச்சரித்த வரி தான் "வீசீரோ வான ஜோதி கதிரிங்கே". இதன் பொருள் "ஆண்டவரே உம்முடைய ஒளியை காட்டுங்கள். இதனால் ஒளியில் இருப்பவர்கள் இந்த ஒளியை காணலாம். மீண்டும் ஒருபோதும் இருளில் நடக்க மாட்டார்கள்". அதே மாலையில் அவர் ஆசீர்வதியும் கர்த்தரே பாடலை எழுதி அந்த திருமணத்தில் முதலில் பாடினார். இதை தொடர்ந்து இந்த பாடல் அனைத்து திருமணங்களிலும் பாடப்படுகிறது.
Aasirvathiyum Karthare
ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே
நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே
வீசீரோ வானஜோதி கதிரிங்கே
மேசியா எம் மணவாளனே
ஆசாரியரும் வான் ராஜனும்
ஆசீர்வதித்திடும்
இம் மணவீட்டில் வாரீரோ ஏசு ராயரே
உம் மணம் வீசச் செய்யீரோ ஓங்கும் நேசமதால்
இம்மணமக்கள் மீதிறங்கிடவே
இவ்விரு பேரையுங் காக்கவே
விண் மக்களாக நடக்கவே
வேந்தா நடத்துமே – வீசீரோ
இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும்
உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும்
இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே
இன்பத்தோடென் பாக்கி சூட்சமே
உம்மிலே தங்கித்தரிக்க
ஊக்கம் அருளுமே – வீசீரோ
ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே
பற்றோடும் மீது சாய்ந்துமே பாரில் வசிக்கவே
வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே
வீற்றாளும் நீர் ஏசு ராஜனாம்
உற்றவான் ராயர் சேயர்க்கே
ஒப்பாய் ஒழுகவே – வீசீரோ
பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே
ஆதரித்தருளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும்
மாதிரளாக இவர் சந்ததியார்
வந்து துதித்தெம்மை என்றும் பிரஸ்தாபிக்க
ஆ தேவ கிருபை தீர்மானம்
ஆம் போல் அருளுமேன் – வீசீரோ
ஞான விவாகம் எப்பொழுதும் ஞாபமாகவே
வான மணாளன் வாஞ்சித்து வாழ்க மனையாளை
ஆனந்தமாகவே தூய தன்மையதை
ஆடையாய் நீர் ஈயத்தரித்து
சேனையோடே நீர் வரையில்
சேர்ந்து நீர் சுகிக்கவே – வீசீரோ
Aaseervathiyum kartharae aanandha migavae
Naesaa udhiyum suththarae niththam magizhavae
Veeseeroa vaanajoadhi kadhiringae
Maesiyaa em manavaalanae
Aasaariyarum vaan raajanum
Aaseervadhithidum
Im manaveetil vaareeroa yaesu rayarae
Um manam veesa seiyeeroa oangum naesamadhaal
Immanamakkal meedhirangidavae
Ivviru paraiyung kaakavae
Vin makkalaaga nadakkavae
Vaendhaa nadathumae – Veeseerao
Im manamakkaloadendrum endrendrum thangidum
Ummaiyae kandum pinsendrum oanga seidharulum
Immaiyae maotchamaakkum vallavarae
Inbathoaden baakki sootchamae
Ummilae thangitharikka
Ookam arulumae – Veeseeroa
Otrumaiyaakkum ivarai oodaaga neer nindrae
Patroadum meedhu saaindhumae paaril vasikkavae
Vetri petroangum ivar nenjathilae
Veetraalum neer yaesu raajanaam
Utravaan raayar saeyarkae
Oppaai ozhugavae – Veeseerao
Poodhala aaseervadhathaal pooranamaagavae
Aadharitharulum kartharae aaseervadhithidum
Maathiralaaga ivar sandhadhiyaar
Vandhu thudhithemmai endrum prasthaabikka
Aa dhaeva kirubai theermaanam
Aam poal arulumaen – Veeseerao
Gnaana vivaagam eppozhudhum gnaabagamaagavae
Vaana manaalan vaanjithu vaazhga manaiyaalai
Aanandhamaagavae thooya thanmaiyadhai
Aadaiyaai neer eeyatharithu
Senaiyoadae neer varaiyil
Saerndhu neer sugikkavae – Veeseerao
Ещё видео!